தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கினால் ரயில் போக்குவரத்துக நடைபெற்று நடைபெற்று வந்தது. ஆனாலும் பல வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் இல்லாததால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை எழும்பூர், –திருச்செந்தூர் சிறப்பு ரயில் ஜுன் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூர், –சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 16 –ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மே 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்–மதுரை அமிர்தா சிறப்பு ரயில் ஜூன் 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மதுரை, –திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில் ஜூன் 16-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.