ஜெயலலிதா நினைவிடம்: 27–ந் தேதி திறப்பு விழா – எடப்பாடி, ஓ.பி.எஸ் நேரில் ஆய்வு

சென்னை,

அண்ணா தி.மு.. தலைமை கழகத்தில் இன்று அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

27–ந் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை சிறப்பாக நடத்தவும் குடும்பம் குடும்பமாக அனைவரும் திரண்டு வர ஏற்பாடுகளை செய்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், விரைந்து பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

அண்ணா தி.மு.. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான . பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில் இன்று காலை (22–ந்தேதி), அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கு பெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் அனைவரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், அம்மாவின் நினைவிட வளாகம் 27–ந் தேதி அன்று திறந்துவைக்க இருப்பதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது சம்பந்தமாக, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான . பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள் என்று அண்ணா தி.மு.. தலைமைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது. 27–ந் தேதி அன்று ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பெருமளவில் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும். அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

இதனை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வமும் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்கள். உடன் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பலரும் சென்றார்கள். ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் நினைவிடத்தில் நடந்து வரும் பணிகளை நேரில் பார்வையிட்டனர். அதிகாரிகளுடன் விவரங்களை கேட்டார்கள். விரைந்து பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினர். தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.

அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 28–ந்தேதி முதலமைச்சர் அறிவிப்பு செய்தார். அந்த இடத்தில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் நினைவிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கும் பணி தொடங்கி, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.  இந்தப் பணிகள் அனைத்தையும் பொதுப்பணித்துறை மேற்கொண்டது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந்தேதி ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க தமிழக அரசு திட்டமிட்டது. எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை 27-ந்தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திறந்துவைக்க உள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ப.தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்று அரசு அறிவித்திருந்தது.

 

Translate »
error: Content is protected !!