ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 200 ஜோடி மாடுகள் கலந்துகொண்ட மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது

கடந்த சில மாதங்களாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் தேனி மாவட்ட பகுதியில் தடைசெய்யப்பட்டு இருந்தது தற்போது அந்த தடை நீக்கப்பட்டது தொடர்ந்து இன்று தேனி மாவட்டம் சின்னமனூரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 200 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான், பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தட்டான்சிட்டு என எட்டு பிரிவின் கீழ் பந்தயம் நடைபெற்றது. இந்த எளிய பந்தயத்தில் தேனி மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை என பல மாவட்டங்களிலிருந்து மாடுகளும் சாரதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த பந்தயத்தில் வெற்றி பெறும் மாடுகளுக்கு ரொக்கப் பரிசுத் தொகையாகவும், சுழல் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சின்னமனூர் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கண்டு களித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சின்னமனூர் நகர அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Translate »
error: Content is protected !!