ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் : 16 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் , 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு முடக்கத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதையொட்டி, நாளையும், மே 2ஆம் தேதியும் 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும், திருச்சிகாரைக்குடி சிறப்பு ரயில், மதுரைவிழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைபுதுச்சேரி, திருச்சிகரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முழுமுடக்க நாளான நாளை ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!