திமுக மாவட்ட செயலாளர்களின் நாளை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (03.12.2020) காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டம், காணொளி காட்சியின் மூலம் நடைபெறுகிறது. இதில், டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசப்படும். இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.