சமூக வலை தலங்களில் பிரபலம் ஆவதற்காக தடை செய்யப்பட்ட வனப் பகுதியான எலிவால் அருவியின் ஆபத்தான பகுதியில் சென்று வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள். தேவதானப்பட்டி வனத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது சமூக ஆர்வளர்களிடயே அதிர்சசியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ள எலிவால் அருவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த அருவியானது தமிழகத்தின் மிக உயரமான அருவியாகவும் இந்திய அளவில் 6-வது மிக உயரமான அருவியாக உள்ளது.
இந்த அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரை கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அருவியின் எதிரே உள்ள கொடைக்காணல் சாலையில் உள்ள டம்டம் பாறை என்னுமிடத்திலிருந்து அழகை ரசித்து செல்வது வழக்கம்.
தற்பொழுது அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் கொரோனா பொதுமுடக்கம் தடையை மீறி தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அடர்ந்த வனப் பகுதிக்கு மேல் உள்ள அருவிக்கு இளைஞர்கள் ஆபத்தை உணராமல் அருவிப் பகுதிக்குச் சென்று வீடியோ எடுத்து யூடியூப், ஃபேஸ் புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட இணையதளங்களில் சமூக வலை தலங்களில் பிரபலம் அதற்காக அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்து வருகின்றனர்.
வனப்பகுதிக்குள் அத்துமீறி நுலைபவர்களை தடுக்க வேண்டிய வனத்துறையினர் தடுக்கப்படாமல் உள்ளதால் இதற்கு வனத்துறையினர் துணை போகின்றனரா அல்லது வனத்துறையினர் பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தின் போது இதே போன்று அதிகமான அளவில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவு செய்து ஒளிபரப்பான நிலையில்,
வனத்துறையினர் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு யாரும் செல்லாத வாரு கண்கணித்து வந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று இரண்டாவது பொது முடக்க நேரத்தில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் ஆபத்தான பகுதிக்குச் செல்லும் இளைஞர்களை தடுத்து நிறுத்தி உயிர் பலி ஏற்படுதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.