தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் புதிதாக 2,146 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 48 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய கொரொனா பாதிப்பு குறித்து, தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று (நவ. 10) ஒருநாளில் புதிதாக ஆண்கள் 1,335 உட்பட மொத்தம் 2,146 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 7 லட்சத்து 48 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரொனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 577 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 6,024 ஆக உயர்ந்துள்ளது.
மொத்த பாதிப்பில் ஆண்கள் 4 லட்சத்து 51 ஆயிரத்து 808 பேர்; பெண்கள் 2 லட்சத்து 96 ஆயிரத்து 384 பேர், திருநங்கைகள் 33 பேர் ஆகும். இன்று புதிதாக 71 ஆயிரத்து 511 பேருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனாவுக்கு தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழந்தனர். அவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 9; அரசு மருத்துவமனைகளில் 16 பேர் ஆகும். மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.