தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது அ.தி.மு.க தான் – கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று கே.பி.முனுசாமி பரபரப்பாக பேசினார்.

சென்னையில் நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசியது, தற்போது திராவிட இயக்கம் இந்த நாட்டை சீரழித்துவிட்டார்கள் என்று சில தேசிய கட்சிகள் சொல்கிறார்கள்.

]சில சந்தர்ப்பவாதிகள் சொல்கிறார்கள். இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தை சீரழித்துவிட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த தேசிய கட்சிகளுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகிறது.

இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் தமிழக அரசு, மத்திய அரசிடம் விருதுகளை பெற்றிருக்கிறது என்றால், இந்த ஆட்சி எவ்வளவு சிறப்பான ஆட்சியாக இருக்கவேண்டும். 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுவை யாராலும் அழிக்க முடியாது என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு மறைந்திருக்கிறார். இந்த தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த 50 ஆண்டுகளில் இந்த தமிழகத்தை ஆட்சி செய்யக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக என்கிற மாபெரும் இயக்கம்தான். கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அதிமுக தலைமையில்தான் ஆட்சி. இதில் கூட்டணி ஆட்சி என்பதற்கே பொருள் இல்லை. தேவையும் இல்லை. எனவே கூட்டணி ஆட்சி அமைப்போம், கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என்று எண்ணத்தோடு எந்த அரசியல் கட்சிகளும் நம்முடன் கூட்டணி வரும்போது இதை சிந்தித்துக்கொள்ளவேண்டும்.

 

Translate »
error: Content is protected !!