தமிழக கோவிலில் இருந்து இங்கிலாந்திற்கு கடத்தப்பட்ட 3 வெண்கல சிலைகளை 42 ஆண்டுகளுக்குப் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டு கொண்டுவந்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு முன்பு லண்டனைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ராமர், லட்சுமணர் மற்றும் சீதை ஆகிய 3 வெண்கலச் சிலைகள் விற்பனைக்கு உள்ளதாக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த சிங்கப்பூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் அது தொடர்பாக தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
அந்த சிலைகள் தமிழகத்தைச் சேர்ந்தவை என்றும் அவை திருடப்பட்டு விற்கப்பட்டவை என்றும் அவர் அளித்த தகவலில் கூறியிருந்ததாக தெரிகிறது. விசாரணையில், அந்த சிலைகள் மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் அமைந்துள்ள, விஜயநகர காலத்தை சேர்ந்த கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய நிலையில், 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சிலைகள் மீட்கப்பட்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து, காணொலி வாயிலாக மத்திய கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரஹலாத் படேல் முன்னிலையில், தமிழக அரசின் பிரதிநிதிகளிடம் 3 சிலைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.