தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பொய் வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜலால் முகம்மது தலைமை வகித்தார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய மக்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் பொய்வழக்கு பதிந்துள்ளதாக, குற்றம்சாட்டினர்.

இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம், மாவட்ட துணை தலைவர் எம். அந்தோணிச்சாமி உள்ளிட்டவர்களும், ஜனநாயக அமைப்பு தோழர்களும் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!