தமிழ்நாடு போலீசாருக்கு தெரியாமல் டில்லி சென்ற அய்யாக்கண்ணுவை – போராட்டத்திற்கு செல்லவிடாமல் தடுப்புக்காவலில் டெல்லி காவல்துறையின் வைத்துள்ளனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டில்லி செல்வதைத் தடுக்கும் வகையில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள வீட்டில் போலீசார் தொடர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று எலிக்கறி தின்றும் போராட்டத்தில் ஈடுபட்டார் தன்னை டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் தமிழ்நாடு போலீஸ் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி வந்த நிலையில் நேற்று மாலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை செல்வதாக கூறி சென்றவர் உயர்நீதி மன்றத்திலிருந்து மதுரை விமான நிலையம் சென்று விமானத்தில் டில்லி சென்ற அய்யாக்கண்ணு டில்லி விமான நிலையத்தில் இருந்து கரோல்பார்க் வரை டில்லி போலீஸ் பாதுகாப்பு கண்காணிப்பில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளார், மேலும் இன்று போராட்டத்திற்கு செல்ல முயன்ற அய்யாக்கண்ணு வை தடுத்து போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.