திமுக முன்னாள் செயலாளர் வைகை சேகர் உள்பட 18 பேர் விடுதலை..!

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிபட்டி தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட திமுக வைகை சேகர் மீது அரசு சார்பாக போடப்பட்ட கொலை வழக்கில் ஆண்டிபட்டி முன்னாள்  ஒன்றிய  திமுக செயலாளர் வைகை சேகர்  உள்பட 18 பேர் விடுதலை. தேனி முதன்மை மாவட்ட நீதிபதி  தீர்ப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செஞ்சூரி(52). கடந்த 2012ஆம் ஆண்டு இறந்த இவரது மரணத்தை  கொலை வழக்காக ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்தனர்

இதில் ஆண்டிபட்டி ஒன்றிய திமுக செயலாளர் வைகை சேகர் உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு  செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் இன்று தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட ஆண்டிபட்டி ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் வைகை சேகர் உள்பட 18 பேரையும் விடுதலை செய்து முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா தீர்ப்பளித்தார்.  2002ல் நடைபெற்ற ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து வைகை சேகர் கூறுகையில் 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசின் சார்பாக தன் மீதும் தன்னை சார்ந்தவர்கள் மீது 5 பொய் வழக்குகள் போட்டப்பட்டதாகவும் அதில் 4 வழக்குகளில் நீதி மன்றத்தில் பொய் வழக்கு என தீர்ப்பு வந்த நிலையில் தன்னோடு 18 நபர்கள் மீது தொடரப்பட்ட கொலை வழக்கிலும் இன்று கொலை வழக்கில் தனுக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தீர்பு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!