திருச்சியில் தை அமாவாசையையொட்டி முதாதையருக்கு திதிகொடுத்து வழிபாடு…..பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்

தை அமாவாசையையொட்டி முதாதையருக்கு திதிகொடுத்து வழிபாடுதிருச்சி அம்மாமண்டபம் காவிரிஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

தை அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தைஅமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர்.

தை அமாவாசையன்று ஆண்டின் பிற அமாவாசைநாட்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனிதநீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர். இதனால் முன்னோர்களின் ஆசிர்வாதம் என்றும் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி தைஅமாவாசை தினமான இன்று திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில், கங்கையின் புனிதமாக கருதப்படும்; புனிதகாவிரிஆற்றில் நீராடி பின்னர்தங்களது மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடுசெய்தனர்.

இதில் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவழிபாடு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து காவிரி தாயாரையும் பின்னர் ஸ்ரீரங்கம், திருவாணைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தனர்.

இதேபோன்று அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் பொதுமக்கள் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கொரோனா பாதிப்பிற்குப்பிறகு ஆடி மற்றும் புரட்டாசி மகாளய அம்மாவாசை தினத்தன்று அம்மாமண்டபம் மற்றும் இதர படித்துறைகள் மூடப்பட்டதால் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யமுடியாதபட்சத்தில் இன்று தை அமாவாசையில் மகிழ்ச்சியுடன் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பு வசதிக்காக பலத்த போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

Translate »
error: Content is protected !!