திருச்சியில் மினி கிளினிக்குகளை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தனர்

தமிழ்நாடு முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

 

அதன்படி திருச்சி மாவட்டத்தில் 58 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனையடுத்து இன்று முதல் கட்டமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சங்கலியாண்டபுரம்,தென்னூர், கே.சாத்தனூர் ஆகிய மூன்று இடங்களிலும் மற்றும் ஊரக பகுதிகளிலும் மினி கிளினிக்குகளை சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்குமான பரிசுப்பெட்டகத்தை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு,திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்,மருத்துவ துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கிளினிக்குகள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Translate »
error: Content is protected !!