திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு தனது பிரச்சாரத்தை தொடங்கினார்..
முன்னதாக அந்த பகுதியில் திமுக வேட்பாளர் பழனியாண்டி க்கு பட்டாசு வெடித்து தாரை தப்பட்டை உடன் 500-க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் பழனியாண்டி கூறுகையில்.,
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனையை நல்ல சட்ட ஆலோசகர் உடன் ஆலோசித்து ஒருவருட காலத்திற்குள் ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவேன் எனவும், ஏற்கனவே திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த ஒரு பயனும் இல்லை, இதற்கு முன் இங்கு வெற்றிபெற்று அமைச்சராக இருந்தார் வளர்மதி, ஸ்ரீரங்கத்திற்கு பேருந்து நிலையம் கூட கொண்டு வரவில்லை என குற்றம் சாட்டினார்.
தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கு.பா கிருஷ்ணன் முன்னாள் விவசாயத்துறை அமைச்சராக அம்மா காலத்தில் ஐந்து ஆண்டு காலம் பணியாற்றியவர், தற்போது அவருக்கு வயதாகி விட்டது எனவும் முப்பதாண்டு காலம் அரசியலில் இருந்த அவர் பல்வேறு தொகுதியில் மாறி மாறி வலம் வந்தவர் இந்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்..
திருச்சி இன்று முன்னேற்றம் அடைவதற்கு காரணம் தற்போது திமுக முதன்மைச் செயலாளராக கூடிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அவர்கள் தான்.. இன்று நாங்கள் அனைவரும் வெள்ளை சட்டை அணிவதற்கு காரணம் கலைஞர், கலைஞரின் பிள்ளை தளபதி ஸ்டாலின் எந்த சொல்லையும் தட்டாமல் செய்பவர் எனவே ஸ்ரீரங்கம் தொகுதி அடிமனை பிரச்சனையை நல்ல சட்ட ஆலோசகர் உடன் கலந்து ஆலோசித்து இதை தலைமையிடம் கூறி ஒரு வருடத்தில்
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவேன்.. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை ஏற்படுத்தி நிலத்தடி நீர் உயர வசதிகளை செய்து கொடுப்பேன் என கூறினார்… ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு உர்சாக வரவேற்பு அளித்தனர்.