திருடிய வாகனத்தை ரோட்டில் உருட்டிக் கொண்டு வந்தபோது வண்டி உரிமையாளரிடம் சிக்கிய பலே திருடன்

திருடிய வாகனத்தை ரோட்டில் உருட்டிக் கொண்டு வந்தபோது வண்டி உரிமையாளரிடம் சிக்கிய பலே திருடன்.

சென்னை

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் பலே திருடன் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அதனை உருட்டிச்சென்ற போது வண்டியின் உரிமையாளரிடமே போதையில் சிக்கிக் கொண்டான்.

அந்த சுவாரஷ்ய சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

சென்னை, மைலாப்பூர், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 20). இவர் கடந்த 13ம் தேதியன்று இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவைத்து விட்டு மறுநாள் காலை வந்து பார்த்தார்.

அப்போது, இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. தனது நண்பர்களுடன் சேர்ந்து அக்கம் பக்கத்தில் தனது வாகனத்தை தேடியுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் மயிலாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடை அருகே இரண்டு நபர்கள் தனது இருசக்கர வாகனத்தை ஒருவர் தள்ளிக்கொண்டு வருவதை கண்ட ஹரிஹரன் அதிர்ச்சியடைந்தார்.

தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த நபர்களை பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பியோடி விட்டார். மற்றொருவரை இருசக்கர வாகனத்துடன் மடக்கி பிடித்தனர். அது குறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த நபர் பெயர் ரமேஷ் பாதுசிங் (வயது 31) என்பதும் லைட் ஹவுஸ் பகுதியில் பிளாட்பார்மில் வசிப்பவர் எனவும் தெரியவந்தது. அவரிடமிருந்து ஹரிகரனின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட ரமேஷ்பாதுசிங்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Translate »
error: Content is protected !!