தேனி மற்றும் போடிநாயக்கனூரில் உள்ள வெற்றி சினிமாஸ் திரையரங்குகளில் வருமாணவரித் துறையினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சோதனை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல் இவருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றி சினிமாஸ் என்ற பெயரில் திரையரங்குகள் உள்ளது. இதில் தேனி பழனிச்செட்டிபட்டி யில் உள்ள வெற்றி சினிமாஸ்–ல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற்பகல் 1 மணியில் இருந்து ஐந்து பேர் கொண்ட வருமானவரித்துறை குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரி கணக்குகளை சரிவர தாக்கல் செய்யாமல் இருந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து வருமான வரித்துறையினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
உரிமையாளர் வெற்றிவேல் உசிலம்பட்டி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனின் சகோதரர். மகேந்திரன் தற்போது அதிமுகவிலிருந்து விலகி அமமுக மாநில அமைப்பு செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பணம் ஏதும் கைபற்றப்படவில்லை,சோதனை முடிவில் கணக்கில் காட்டப்படாத பணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.