தீயணைப்பு துறையை 101 கட்டுப்பாட்டு அறை என்னை அழைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிலையத்தின் சார்பில், தென்மேற்கு பருவ மழையையொட்டி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அவசர காலங்களில் தீயணைப்பு துறையினரின் உதவியை நாடுவதற்கு, நிலையத்தின் தொடர்பு எண்ணிற்கு தொடர்பு கொள்வதை தவிர்த்து, தீயணைப்பு துறைக்கு என வழங்கப்பட்டுள்ள 101 என்கின்ற அவசரகால எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர், திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தின் நிலைய அலுவலர், வருவாய்த் துறையினர், உள்ளிட்ட ஏராளமன பொதுமக்கள் கலந்து கொண்டனர்.