மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கோடை மழையால் 53 அடியை எட்டியதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோர தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்டகளாக பெரியகுளம் அருகே உள்ள மேற்க்கு தொடர்ச்சி மழைப்பகுதியில் பெய்த கோடை மழையின் காரணமாக மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 42 அடியில் இருந்து சிறிது சிறிதாக உயர்ந்து கடந்த 20ஆம் தேதி அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 51 அடியாக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து மஞ்சளார் அணை உதவி செயர் பொறியாளர் சேகரன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்த நிலையில் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று 12 மணியளவில் அணையின் நீர் மட்டம் 57 அட்யில் 53 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டி, G.கல்லுப்பட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தல்க்குண்டு உள்ளிட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
55 அடியில் 3ஆம் கட்ட வெள்ள அபயா எச்சரிக்கை விடப்பட்டு வரும் உபரி நீர் ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்தானது 45 கன அடியாக உள்ள நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் அவ்வப்பொழுது மலை பெய்து வருகின்றது.