தேனி மாவட்டம் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு….

தேனி மாவட்டம் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு சீறிபாய்ந்த காளைகள் – திமிழ் தழுவி காளை அடக்கிய வீரர்களை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனு அருகே உள்ள அய்யம்பட்டியில் எழை காத்த அம்மன் ஸ்ரீ வல்லரடி கார சுவாமி கோவில் ஜல்லிக்கட்டு விழா துவங்கிது. இதில் மதுரை,திண்டுக்கல், அலங்காநல்லுர், பாலமேடு, சிவகங்கை, விருதுநகர், மேலும், திருச்சி உள்ளிட்ட மாவட்டம் இன்றி தேனி மாவட்டத்தில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டுள்ளது.

இதில் 6 சுற்று முறையில் 300 மாடுபிடி வீரர்கள் 600 காளைகள் பங்கேற்கின்றன. ஜல்லிக்கட்டு விழா.பாதுகாப்புக்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1 ADSP 4 DSP 20 Inspector , 40 SI மற்றும் காவலர்கள் என 600 காவல் துரை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர், 

மேலும் மருத்துவ குழுவினர் கால்நடை மருத்துவர்கள், அம்புலன்ஸ் வசதிகள் உட்பட தயார் நிலையில் வைத்து பதிவு பெற்ற காளைகளை மருத்து பரிசோதனை செய்யப்பட்டு தகுதி சான்று மற்றும் அடையாள அட்டை ஆகிய சரிபார்க்கப்பட்டு பின் அனுமதிக்கப்பட்டது.

மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் எடை,உயரம், பார்வை, காயங்கள், மேலும் போதை வஸ்த்துக்கல் போன்ற பரிசோதனை உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு துவங்கியது. வாடிவாசல் திறந்து முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.  பின்னர் டோக்கன் முறையில் சிறப்பான காளைகளை உற்சாகமாக மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

இந்த ஜல்லிக்கட்டு விழாவை தேனி மாவட்ட வருவாய் ஆய்வாளர் ரமேஷ் துவக்கி வைத்தார். மேலும்  விழாவில் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் ;. இவ்விழாவை காண பல மாவட்டங்களில் இருந்து வந்தும் தேனி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

இந்த ஜல்லிகட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா, தங்க்காசு, மிக்ச்சி ,கிரைண்டர் ,பேன் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் விழாக்கமிட்டி சார்பாக வழங்கப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!