தேவாரம் பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்

தேவாரம் பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாக்கலூத்து மலைப்பாதையை தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் என்று ஆய்வு மேற்கொண்டபின் இந்த  என வாக்குறுதி கூறினார்.

தேனி மாவட்டம் தேவாரம் பண்ணைப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் நாள்தோறும் கேரளாவிற்கு கூலி வேலைக்காக சென்று வருகின்றனர். மேலும் தேவாரத்தில் இருந்து கேரளாவில் இருக்கும் சாக்கலூத்துமெட்டு சாலை பயன்பாட்டில் இருக்குமேயானால் தமிழககேரளாவிற்கிடையேயான வர்த்தகங்கள் பெரிய அளவில் பெருகவும் ஒரு வாய்ப்பாக அமையும்.

இதன் காரணமாக தேவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறத்து மக்கள் சாக்கலூத்து மெட்டு சாலையை  உடனடியாக அமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது வரை இந்த சாக்கலூத்துமெட்டு சாலை பாதையானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்த மலைப்பாதையில் அரிய வகை விலங்கினங்கள் இருப்பதால் இந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தேனி மாவட்டம் தேவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேவாரத்தில் இருந்து கேரளாவை இணைக்கும் சாலையான சாக்கலூத்துமெட்டு   மலைப்பாதையை இன்று தேனி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆய்வு மேற்கொண்டார;

இந்த ஆய்வில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்  ஜக்கையன் வனத்துறையினர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். சாக்கலூத்துமெட்டு  சாலையை பார்வையிட்ட தேனி பாராளுமன்ற உறுப்பினர் தேவாரம் பகுதி மக்களுக்கு இந்த மலைப்பாதை எந்த அளவுக்கு பயன்படும் என பொதுமக்கள் இடையே கேட்டறிந்தார்.

மேலும் இந்த சாலை அமைப்பதில் எவ்வாறு சிக்கல்கள் உள்ளது எனவும் அதற்கான வழிமுறைகள் என்னவென்றும் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை இடையே கலந்தாலோசித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது சாக்கலூத்துமெட்டு சாலை, எனது தேர்தல் வாக்குறுதியில் உள்ள ஒன்றாக விளங்குகிறது.

கூடிய விரைவில் இந்த சாக்கலூத்துமெட்டு  மலைச் சாலை அமைப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சாக்கலூத்துமெட்டு சாலை அமைப்பது குறித்து எடுத்து வைத்துள்ளேன். அதேபோன்று மத்திய அமைச்சர்கள் இடமும் இந்த சாலையை அமைப்பது குறித்தும் பேசியுள்ளேன். எனவே விரைவாக இந்த மலைச் சாலை அமைத்து தமிழக கேரள மக்கள் எளிதாக இந்த தேவாரம் பகுதிக்கு வந்து செல்லக்கூடிய வழிவகை ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

 

Translate »
error: Content is protected !!