நடிகர் சிம்பு வழங்கிய தீபாவளி தங்கப்பரிசு

சுசீந்திரன் டைரக்சனில் ‘ஈஸ்வரன்’ படத்தில் உடல் மெலிந்து புதிய பரிமாணத்துடன் நடிகர் சிம்பு.

சென்ற மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றன. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசாக தங்கம் வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினாராம் சிம்பு. இப்படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கி அனைவரையும் மகிழ்வித்தாராம். மேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கினாராம் சிம்பு. தீபாவளி வாழ்த்துக்களுடன் தங்கப் பரிசு அளித்து இன்ப அதிர்ச்சியை அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்களாம்.

Translate »
error: Content is protected !!