நாள் ஒன்றுக்கு 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்ஒன்றுக்கு ஒரு லட்சத்தை நெருங்குகிறது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 97,570 கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஒரே நாளில் அதிகரித்துள்ளன, இதை தொடந்ர்து  நாட்டில் மொத்த தொற்று நோய்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 46,59,984 ஆக உயர்ந்து உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 1,201 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்புகள் 36,24,196 பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுகுணமாகி உள்ளனர் சிகிச்சையில் 9,58,316 பேர் உள்ளனர்.அமெரிக்காவுக்குப் பிறகு உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்தகவல்  படி, மொத்தம் 5,51,89,226 மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 10,91,251 மாதிரிகள் நேற்று வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்டன.கொரோனா எண்ணிக்கை 9.8 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா வைரசால் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகத் மராட்டியம் தொடர்கிறது. மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டாவது மாநிலம் ஆந்திரா தொடர்ந்து  தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளனமொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மொத்த பாதிப்புகளில்  ஒரு சிறிய பகுதி மட்டுமே தற்போது நாடு முழுவதும் செயலில் உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!