படத்தில் வருவது போல லஞ்சஒழிப்பு துறை போலீசில் மாட்டி கொண்ட மின்வாரிய உதவிசெயற்பொறியாளர்..!

மின்கட்டண முறையினை மாற்றம் செய்வதற்காக 30ஆயிரம் லஞ்சம்கேட்ட ஸ்ரீரங்கம் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது.

திருச்சி திருவாணைக்காவலைச் சேர்ந்தவர் பழனியப்பன், திருவாணைக்காவல்சென்னை பைபாஸ் சாலையில் பேக்கிங் நிறுவனம் நடத்திவருகிறார். தனது நிறுவனத்திற்கு ஏற்கனவே இருந்த மின்கட்டணத்தை மாற்றி கூடுதல் மீட்டருடன், புதிய மின்கட்டண முறையினை வழங்கிடகோரி ஸ்ரீரங்கம் ரெயில்நிலையம் அருகில் உள்ள மின்சார அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

மின்கட்டண முறையினை மாற்றம் செய்வதற்காக ஸ்ரீரங்கம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் 50ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், தன்னால் மிகப்பெரிய தொகையினைக் கொடுக்க முடியாது என்று பழனியப்பன் கூறியநிலையில், இறுதியாக 30ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்ச பணம் கொடுக்க மனமில்லாத பழனியப்பன் திருச்சி லஞ்சஒழிப்புத்துறை டிஎஸ்பி சக்திவேலிடம் புகார் தெரிவித்தார். லஞ்சஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் லஞ்சப்பணத்தை பழனியப்பன் கொடுக்க முயன்றார், அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்புதுறை போலீசார் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் ராஜேந்திரனை கையும் களவுமாக பிடித்ததுடன், தொடர்ந்து அலுவலகத்தில் மற்ற அதிகாரிகளிடமும், ஊழியர்களிடமும் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தொடர்ந்து ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்றும் மின்வாரிய அலுவலகத்தில் மற்றும் வீட்டிலும் சோதனை நடத்திவருகின்றனர்.

Translate »
error: Content is protected !!