பட்டா ரத்து செய்ததை ஆவணப்படுத்த வேண்டும்: அரசுக்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கோரிக்கை

கொடைக்கானலில், ஆறு மாதங்களுக்கு முன்பு 1100க்கும் மேற்பட்ட டி.கே.டி. பட்டா ரத்து செய்ததை, சிறப்புக்குழு அமைத்து முறையாக ஆவணப்படுத்த வேண்டும் என்று, அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர் ஹென்றி வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், இதுதொடர்பாக, அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர் ஹென்றி அளித்த பேட்டியில் கூறியதாவது:

கொடைக்கானலில் பெருமளவில் நிலங்கள் நில ஒப்படை ஆவணத்தின் வாயிலாக (DKT) பட்டா உள்ளது. இந்த டி.கே.டி. பட்டாக்கள் விற்பனை செய்வதற்கு யாரிடம் அனுமதி வாங்கத் தேவையிஇல்லை என 27.03.2008 அன்று, சென்னை நில நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், ஆனால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி.கே.டி. பட்டாகள் விற்பதற்கு பொதுமக்கள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது கோப்புகள் கிடப்பில் போடுவதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தலைமையில் குழு அமைத்து, 1100-க்கும் மேற்பட்ட டி.கே.டி. பட்டாக்களை ஆவணப்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பத்திரப்பதிவு மீதான முத்திரைதாள் கட்டணமும், சொத்திற்கான முத்திரைத்தாள் கட்டணமும் பாதியாக குறைக்க, பதிவுத்துறை மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரைமுறைச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை அங்கீகரிக்க சிறப்பு திட்டம், கடந்தாண்டு நவம்பர் மாதமே முடிந்ததுவிட்டது. இந்த வரைமுறை சட்டத்தை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஓராண்டுக்கு நீடிக்க வழிவகை செய்ய வேண்டும்.

கொடைக்கானலில் மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமம் பட்டா வீட்டுமனைகளை அங்கீகாரம் இல்லாமல் கிடப்பில் போட்டுள்ள நிலையில் அரசாணை 66-ல் ஏற்படுத்தி இந்தாண்டு தீர்வு காணப்படும் வகையில் வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த அரசாணை சாமானிய மக்களுக்கு வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற முடியாத நிலை இருப்பதால், 2017ம் ஆண்டு எளிமை செய்து அங்கீகாரம் பெற்ற மாதிரியை கொண்டு, அதை பின்பற்றி மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமம் பட்டா வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற, தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!