டாஸ்மாக்கில் 18 ஆண்டுகளாக பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநிலம் தழுவிய அளவில் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணிக்கூண்டு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு எல் பி எஃப் டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் மாரிமுத்து, சிஐடியு டாஸ்மாக் மாவட்ட தலைவர் ராமு, ஏஐடியுசி டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தனர்.
சிஐடியு மாவட்ட தலைவர் பிரபாகரன் மாநில குழு உறுப்பினர் கோபால், எல் பி எஃப் மாவட்ட செயலாளர் கருப்பையா, சிஐடியு மாவட்ட செயலாளர் சீனிவாசன், எஸ்சி எஸ்டி டாஸ்மாக் மாநில பொதுச்செயலாளர் மகாமுனி, ஏஐடியுசி கௌரவத் தலைவர் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில்18 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். சுழற்சி முறையில் பணி இடமாறுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.