தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி சுப்புராஜுகு, விளையாட்டு வீரர்கள் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவர், விளையாட்டு பயிற்சியாளராக பணியை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திறம்பட செய்து வந்தவர்.
பதவி உயர்வு பெற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வந்த நிலையில், அண்மையில் இவர் பணிநிறைவு செய்து ஓய்வு பெற்றார்.
பெரியகுளம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுப்புராஜுவின் பெருமைகளை பல்வேறு விளையாட்டு வீரர்கள் நினைவு கூர்ந்து பேசினர். அவருக்கு மாவீரன் சிலையை வழங்கி, மாலை பொன்னாடை போர்த்தி, விளையாட்டு வீரர்கள் கவுரவித்தனர்.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள், மாவட்ட விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் அலுவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.