பந்தல் ராஜா கைது… ஓபிஎஸ் தூண்டுதலின் பெயரில் பொய் வழக்குகள்… வேளாளர் சமுதாயத்தினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

வேளாளர் சமுதாய முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜாவை ஓபிஎஸ் தூண்டுதலின் பெயரில் பொய் வழக்குகள் போட்டு சென்னையில் கைது செய்துள்ளதாக கூறி பெரியகுளத்தில் வேளாளர் சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம்.

வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று சமுதாயத்திற்கு தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மத்தியஅரசு வழங்கியது முதலே வேளாளர் சமுதாயத்தினர் பல்வேறு எதிர்புகளை தெரிவித்து போரட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ள நிலையில் நேற்று சென்னையில் வேளாளர் சமுதாய முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து வேளாளர் சமுதாயத்தினர் பெரியகுளத்தில் தேனி திண்டுக்கல் சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் பந்தல் ராஜா வேளாளர் சமுதாயத்தின் சார்பாக போடி தொகுதியில் அதிமுகவிற்கு எதிராக தேர்தலில் நிற்க உள்ளதால் ஓபிஎஸ் அவர்களின் தூண்டுதலின் பெயரில் காவல்துறையினர் பந்தல் ராஜா மீது பொய் வழக்குகளை போட்டு சென்னையில் கைது செய்துள்ளதாக கூறி பெரியகுளத்தில் மறியலில் ஈடுபட்ட வேளாளர் சமுதாய மக்கள் குற்றச்சாட்டியதோடு

கடந்த மாதம் போடியில் வாஊசியின் சிலை திறப்பின் போது ஓபிஎஸ்க்கு எதிராக கொஷமிட்ட பெண்களை பெண்காவலர்களை கொண்டு ஆடைகளை களைந்து அடித்து இழுத்து சென்றதாகவும் அதை பார்த்த ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவிந்தரநாத் அதை தடுத்து நிறுத்தாமல் இருந்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் போடி தொகுதியில் வேளாளர் சமுதாயத்தின் வாக்குகளை பெற்று இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை அவருக்கு எதிராக எங்கள் சமுதாயத்தினர் தேர்தலில் போட்டி இடுவதை தடுக்கவே காவல்துறையின் மூலம் ஒடுக்கு முறையை ஓபிஎஸ் எடுத்துள்ளதாக சாலை மறியிலில் இடுபட்ட பெண்கள் தெரிவித்து கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!