பஞ்சபூத திருத்தலங்களில் நீர் தளமாக விளங்குவது திருவானைக்கோயில் இத்திருக்கோயில் கோச்செங்கட் சோழ மன்னனால் கட்டப்பட்ட முதல் மாடக்கோவில் இங்கு உள்ள சிவபெருமானை வழிபட நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் தற்போது கும்பாபிஷேகத்திற்கு பிறகு கோயிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோயில் வளாகத்தில் உள்ள நெற்களஞ்சியம் அருகில் தங்ககாசு புதையல் கண்டெடுக்கப்பட்டது அதேபோல் தற்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள குபேர லிங்கேஸ்வரர் சன்னதி அருகில் உள்ள காம்பவுண்ட் சுவற்றை இடித்தபோது மண்ணில் புதையுண்டு இருந்த மூன்று அடி உயரம் கொண்ட சிவலிங்கமும் இரண்டரை அடி உயரம் கொண்ட சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
தற்போது இந்த இரண்டு சிவலிங்கமும் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த லிங்கம் சோழ மன்னர்கள் வழிபட்ட லிங்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.