பள்ளியில் குழந்தைகளுக்கு…போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி,

தூத்துக்குடி சுப்பையா வித்யாலாயா பெண்கள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள்பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

குழந்தைகள்பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் குழந்தைகளின் பாதுகாப்புக்கென உள்ள போக்சோ சட்டம் பற்றியும் குழந்தை திருமண தடை சட்டம் பற்றியும் காவலன் எஸ் .. எஸ் செயலி பற்றியும் பெண்கள் பாதுகாப்புக்கென அரசு வழங்கியுள்ள இலவச தொலைபேசி எண் 1091 மற்றும்

குழந்தைகள் பாதுகாப்புக்கென அரசால் வழங்கப்பட்டுள்ள இலவச தொலை பேசி எண். 1098 பற்றியும் இது தவிர ஆண்கள், பெண்கள், மாணவி, மாணவிகள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் காவல்துறையின் அவசர உதவிக்கு இலவச தொலை பேசி எண் 100 தொடர்பு கொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் வாட்ஸ் ஆப் வசதியுடன் கூடிய ஹலோ போலீஸ் எண். 95141 44100 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்வது பற்றியும் இந்த மாதம் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

என்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது பற்றியும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது பற்றியும் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு எற்படுத்தி பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி மிக முக்கியமானது.

ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால் பெண்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் சுப்பையா வித்யாலாயம் பெண்கள் மேல்நிலை பள்ளி 12 வது வகுப்பு படிக்கும் மாணவிகள் 150 போ் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை இப்பள்ளியின் முதல்வர் சாந்தினி கௌசல் மற்றும் ஆசிரியைகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, உதவி ஆய்வாளர் வேல்ராஜ், லதா உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.

 

Translate »
error: Content is protected !!