பழைய 1000 ரூபாய் நோட்டை மாற்றித்தர கூறி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சீனியப்பன் மகன் நாகராஜ் இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச இயலாதவர் ஆவார்.

இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், அங்காள ஈஸ்வரி, கருப்பாயி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் கூலி வேலை செய்து, குடும்பம் நடத்தி வருகின்றனர் .

மாற்றுத்திறனாளியான நாகராஜுக்கு, அரசு சார்பில் மாததோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறதுதனக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையான ஏழு, 1000 ரூபாய் நோட்டுக்களை அவர் சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது, நாகராஜுக்கு தெரியாது எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாகராஜ் சேமித்து வைத்திருந்த 7, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சில தினங்களுக்கு முன்பு, அவரது மனைவி பஞ்ச வர்ணம் கண்டறிந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த 7 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவர் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது சேமிப்பு பணத்தை மாற்றித் தர கோரி, நாகராஜ் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று கோரிக்கை மனுவை வழங்கினார்.

Translate »
error: Content is protected !!