பாஜக தலைவர் மீது பாலியல் புகார்… கதறி அழும் பெண்ணின் ஆடியோ ‘வைரல்’… அமித்ஷா வந்த நேரத்தில் பாஜகவில் பரபரப்பு!

பாஜக மகளிர் அணி நிர்வாகி ஒருவர், பாஜக மூத்த தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து கடிதம் எழுதியது போன்ற புகைப்படம், கதறி அழுது புலம்பும் பெண்ணின் ஆடியோ ஆகின, சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவர், பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்டம் மகளிரணி பொதுச்செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.ஏ.டி. கலிவரதன் மீது, காயத்ரி பாலியல் புகார் மற்றும் பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டை தெரிவித்திருப்பது போன்ற புகார் மற்றும் ஆடியோ ஒன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

வெளியாகி இருக்கும் ஆடியோவில், அந்த பெண்ணும், புகாருக்குள்ளான கலிவரதனும் பேசுவது போல் அமைந்துள்ளது. ” இதெல்லாம் இங்க பேசாத” என மாவட்ட பாஜக தலைவர் கூற, அந்த பெண் அழுது கொண்டே புலம்புவது போல் உரையாடல் உள்ளது.

“ஏன்டி இப்படி அழுவுற, டேக் இட் இஸி” என்று கூறும் ஆண் குரல், “கட்சி வேலையை மட்டும் கவனி. அது போதும், மத்ததெல்லாம் தானா வரும்” என்று சமாதானமும் செய்வதாக உள்ளது.

எனினும், பாஜக பொதுச்செயலாளர் எழுதியதாக உலா வரும் இந்த கடிதத்தில் தேதி இல்லை. கடிதத்தில் நிறைய எழுத்துப்பிழைகளும் காணப்படுவது, அதன் உண்மைத் தன்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அமித்ஷா சென்னை வந்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் மீதான பாலியல் புகார் தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது, பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பாலியல் புகார், இந்த ஆடியோ விவகாரம் குறித்து கருத்து கலிவரதன் விளக்கம் தரும் ஆடியோவும் வெளியாகி இருக்கிறது. அதில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க என் மீது வீண்பழி சுமத்தி, களங்கத்தை ஏற்படுத்துவதாக விளக்கம் தந்துள்ளார்.

பணம் வாங்கிக் கொண்டு பதவி போடவேண்டிய சூழலில் பாஜக இல்லை. பாஜக நேர்மையான கட்சி, ஆன்மீகமான கட்சி, ஒழுக்கமான கட்சி. பாஜக வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். எனவே என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் என்று கலிவரதன் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!