பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்கும் நடுவண் மேல்நிலை கல்வி வாரியத்தின் (CBSE) திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்.
அதன்படி,
* 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.
* 11-ஆம் வகுப்பு பாடங்களில் 30% முதன்மைத்துவ மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.
* 12-ஆம் வகுப்பு பாடங்களில் 40% முதன்மைத்துவ மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.
* செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
இதனையடுத்து ஜூலை 31 க்குள் மதிப்பெண்கள் மற்றும் முடிவுகள் வெளியாக உள்ளன.