பெரியகுளம் கண்மாயில் நீரைத் தேக்கி வைக்க விடாமல் மதகுகளை திறந்து விடும் மீன் வளர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் மனு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வரும் நீரை கொண்டு பெரியகுளம் பகுதியில் உள்ள கண்மாய்களில் நீரை நிறைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரியகுளம் கண்மாய்க்கு வரும் நீரை அடைத்து கண்மாய்களில் நீரை தேக்கி வைக்க முடியாத அளவுக்கு மீன் வளர்ப்பாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் இதனால் பெரியகுளம் கண்மாய் நம்பியுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று பெரியகுளம் தென்கரை விவசாய சங்கத்தினர் பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கார்த்திகேயனிடம் பெரியகுளம் கண்மாய் நீரை தேக்கி வைக்க தடையாக இருக்கும் மீன் வளர்ப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கண்மாய்களில் நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் கண்மாயில் மீன் வளர்க்க மீன்வளத் துறை மீன் வளர்ப்பதற்கு அனுமதி வழங்காமல் மீன் வளர்க்கப் பட்டிருந்தால் மீன் வளர்ப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயில் நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.