பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் 20 பேருந்துகள் மட்டும் இயக்கம்….ஊழியர்கள் பணிமனை முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் இரண்டாவது நாளாக 20 பேருந்துகள் மட்டும் இயக்கம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்கள் பணிமனை முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

அரசு பேருந்து ஊழியர்கள் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அரசு பேருந்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் இருந்து மொத்தமுள்ள 73 பேருந்துகளில் 20 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு பேருந்து ஊழியர்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு பேருந்து பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் வெளி ஆட்களை வைத்து அரசுப் பேருந்தை இயக்க கூடாது என்றும் தங்கள் போராட்டத்திற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக 14 ஆவது ஊதியக் குழு பேச்சுவார்த்தை துவக்கி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

அரசு பேருந்து ஊழியர்களின் போராட்டத்தினால் அரசு பேருந்து பணிமனைகள் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மிகக் குறைந்த அளவே அரசு பேருந்து இயக்கப்பட்டு வருவதால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!