பெரியகுளம்.. சுத்தமான குடிநீர் வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் நகராட்சி ஆணையரிடம் மனு

பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கலங்கலாக குடிநீர் வருவதால் சுத்தமான குடிநீர் வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் நகராட்சி ஆணையரிடம் மனு அழித்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர் மழையால் சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது.

அதனை அடுத்து சோத்துப்பாறை அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பெரியகுளம் மற்றும் அதன் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி பெரியகுளம் நகராட்சி ஆணையாளரிடம் மனு வழங்கப்பட்டது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் இன்னும் இரண்டு தினங்களுக்குள் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் முத்தையா சமூக முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் குமரன் உட்பட பாமக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

 

Translate »
error: Content is protected !!