2021ம் ஆண்டு சட்டமன்ற பெரியகுளம்(தனி) தொகுதிக்கான திமுக வேட்பாளர் சரவணக்குமார் (தற்போதைய பெரியகுளம் எம்.எல்.ஏ).. பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்…
பெரியகுளம் மூன்றாந்தல் காந்தி சிலை அருகிலிருந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று தாமரைக்குளம் அருகே அமைந்துள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சினேகாவிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்…
அவருடன் மாநில உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா, தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும் முன்னாள் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினருமான ஆசையன், மாவட்ட திமுக பொருளாளர் அருணாசேகர், பெரியகுளம் நகர பொறுப்பாளர் முரளி, ஒன்றிய பொறுப்பாளர் எல்.எம்.பாண்டியன், செல்லப்பாண்டியன், வக்கீல் சிவக்குமார் உட்பட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.