துணை மின் நிலையத்தில் விரிவாக்கப்பணிகள் நடப்பதால், பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள பெரியகுளம் துணை மின் நிலையத்தில் உள்ள 110/22 கேவி மின்பாதையில் (பொம்மிநாயக்கன்பட்டி) விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக வரும் 5ம் தேதி, நவம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் காலை 11.30 மணி முதல், மாலை 4.30 மணி வரை மின் தடை இருக்கும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி மேல்மங்கலம், தேவதானப்பட்டி, காமாட்சிபுரம், நல்லகருப்பன்பட்டி, சில்வார்பட்டி, தண்ணீர் பந்தல், அழகர்நாயக்கன்பட்டி, எண்டப்புளி புதுப்பட்டி, டி.வாடிப்பட்டி, கீழக்காமக்காபட்டிமற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.