கரூர் வாங்கபாளையம் பகுதியில் ஆம்புலன்சில் இருந்து குதித்த ஒரு கொரோனா நோயாளி, பைக்கில் சென்ற வாலிபர்களிடம் நான் ஆஸ்பத்திரிக்கு போவ மாட்டேன்; வீட்டுக்கு போவணும்; லிஃப்ட் கொடுங்க என கெஞ்சினார்.
அங்கே நின்றிருந்த போலீசார், பாவம்பா.. ரொம்ப பயப்படுறான்… போற வழியில இறக்கி விட்ருப்பா என சொல்ல, பைக் ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சி. அனுமதிக்காக காத்திருக்காமல் பைக்கில் ஏறி பேஷண்ட் உட்கார்ந்ததும் பைக் இளைஞருக்கு ஜிவ்வென ஆகிவிட்டது. பயத்தில் உறைந்துபோனார்.
ஊரடங்குல ஊர் சுத்துறவங்களுக்கு அறிவுரை சொல்லியாச்சு; எச்சரிக்கையும் பண்ணியாச்சி; ஆனாலும் வெளில சுத்துறவங்க திருந்த மாட்றாங்க; அதான் இந்த மாதிரி விழிப்புணர்வு பிரசாரத்தை செய்றோம்; இனி தேவை இல்லாம வெளியில வராதீங்க; கொரோனா வார்டுல அட்மிட் ஆகாதீங்கனு பைக் ஓட்டிகளுக்கு போலீசார் அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தனர். பின்புதான் தெரிந்தது வந்தவர் கொரோனோ நோயாளி அல்ல என்று…!