பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் – பொறுப்பேற்ற பிறகு சேலம் மாவட்டம் ஆட்சியர் பேட்டி

சேலம் மாவட்ட 173 மாவட்ட ஆட்சியராக கார்மேகம் இன்று காலை பொறுப்பேற்றார்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைய பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என பேட்டி அளித்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ராமன் மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கார்மேகம் மாற்றப்பட்டு இன்று காலை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளரிடம் கூறியதாவது,

கடினமான காலகட்டத்தில் தற்போது பயணித்து வருகிறோம்.பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவேண்டும் . முழு ஊரடங்கு மக்கள் பாதுகாப்புக் காகத்தான் போடப்பட்டிருக்கிறது.  இன்னும் ஒரு சில வாரங்களில் வீடுகளில் பொதுமக்கள் பத்திரமாக இருக்கவேண்டும். விரைவில் பெரிய இடர்பாடுகளில் இருந்து நாம் மீண்டு வருவோம்.

இதனால் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவேண்டும். களப்பணியில் போர்வீரர்களாக இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்எல்லோரும்  அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள் . இந்த இடர்பாடுகளில் இருந்து நாம் மீண்டெழுவோம்.

நோய்த்தொற்று தன்மை குறையும் வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள்  துணை நின்று ஆதரவு தர கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!