போராட்டம் நடத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு: ஆப்கான் அரசு

ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்துவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து  தாலிபான்கள் தலைமையிலான ஆப்கான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைக்கு குரல் கொடுத்தும்,பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் மக்கள் போராடி வருகின்றனர். காபூலில் அண்மையில் நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். இந்தநிலையில், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போராட்டங்களை நடத்தக்கூடாது என ஆப்கான் அரசின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வாயிலாக கூறியுள்ளது. ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு போராட விரும்புவோர், அதற்கான நோக்கம், எழுப்பப்படும் கோஷம், போராட்டம் நடத்தவுள்ள இடம், தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரம் ஆகியவற்றை தெரிவித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 3 மணி நேரத்திற்கு முன்னரே அனுமதி பெற வேண்டும் என கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது அரசியல் சூழ்ச்சியை முன்னெடுப்போருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!