மக்கள் விரோத விவசாயிகள் விரோத தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடிக்கும் மத்திய மோடி அரசைக் கண்டித்து பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டம். 200க்கும் மேற்பட்டோர் கைது
இந்திய நாட்டின் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் அடிப்படை ஜனநாயக அரசியல் சாசன உரிமைகள் மீதான மோடி தலைமையிலான பிஜேபி அரசு தொடுத்து வரும் தாக்குதல்களை மத்திய தொழிற்சங்க அமைப்புகள் வன்மையாக கண்டித்து மக்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு ஒருநாள் பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வைகை அணை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து கம்பம் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் திமுக உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோh; கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை வரைமுறைப்படுத்துதல் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தாத புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையிணா; கைது செய்தனா;. இந்த சாலை மறியலால் அரை அணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.