மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள்…! இன்று வெளியாகும் என தகவல்

சென்னை,

திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுமாறு தொகுதிகள் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதில் வைகோ தலைமையிலான மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அவை எந்தெந்த தொகுதிகள் என்பதற்கான பட்டியல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, கோவை வடக்கு, மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் , சாத்தூர், அரியலூர், மதுராந்தகம் ஆகிய ஆறு தொகுதிகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யலாம் என்று தெரிகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் தொகுதியில் வைகோவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. மற்ற தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் இந்த கட்சிக்கு வரவேண்டிய வாக்குகளில் முக்கிய பங்காற்றும் என்பது திமுக தலைமை எண்ணமாக இருக்கிறது.

 

Translate »
error: Content is protected !!