நோய்த் தொற்றின் ஊரடங்கு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு நக்சல் தடுப்பு காவல் துறையினர் குருதர்ஸ்ணா மூர்த்தி சேவா சங்கத்தினரும் இணைந்து அரிசி மற்றும் காய்கறி பொருட்கள் வழங்கினார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அஞ்சுகம் அம்மையார் நகர் பகுதியில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்கள் மற்றும் சோத்துப்பாறை அணைக்கு மேல் பகுதியில் உள்ள கருங்கல் பாறை குறவன் குழலி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்கள் நோய்த்தொற்றின் ஊரடங்கு காரணமாக 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த நிலையில்
தேனி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பெரியகுளம் குரு தக்ஷிணாமூர்த்தி அறக்கட்டளையின் அவரின் பங்களிப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ காய்கறி பொருட்கள் மற்றும் பணம் வழங்கினார்.
மேலும் அவர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க இலவச முக கவசங்களையும் அறிவுரைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் செந்தாமரை மற்றும் குரு தட்சிணாமூர்த்தி அறக்கட்டளை நிறுவனர் சரவணன் பங்கேற்று பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.