மாநிலங்களில் 2.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை 56,81,14,630 கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், இதுவரை 54,22,75,723 கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கையிருப்பில் 2,89,47,890 தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன.