மாவட்ட ஆட்சியர அலுவலகத்தில் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி…தக்கநேரத்தில் தடுத்து நிறுத்திய காவல்துறை..!

குடும்ப பிரச்சனை காரணமக மாவட்ட ஆட்சியர அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி. தக்கநேரத்தில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சித்ரா(41) இவரது கணவர் சுரேஷ் இராணுவத்தில் பயியாற்றி வருகிறார் இவர்களுக்கு கடந்த 23 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளது. கணவர;

மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2013 ஆண்டு விவாகரத்து பெற்று சுரேஷ் மறு திருமனம் செய்து கொண்டு வெளியூரில் மனைவியுடன் வசித்து வருகிறார் தற்போது சித்ரா விற்கு வஜீவனாம்சமாக மாதம் 18 ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். தற்போது கணவரின் தந்தை சுப்பரமணிக்கு சொந்தமான வீட்டில் கீழ் தளத்தில் குடியிருந்து வருகிறார்.

மேல் தளத்தில் மாமனார் மாமியார் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் மாமனார் சுப்பிரமணி தூண்டுதலின் பெயரில் குறுவம்மாள் என்ற பெண் சித்ரா குடியிருக்கும் வீட்டை காலி செய்ய தொந்தரவு செய்வதாகவும் வீட்டை பூட்டி வைத்துவிட்டதாகும் முக்கிய ஆவணங்கை திருடிச் சென்றதாகவும் இது குறித்து உத்தமபாளைம் காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு மட்டும் செய்துள்ளனர் கைது செய்யப்படவில்லை.

ற்போது மாமனார் குடும்பத்தினர் வீட்டை காலி செய்ய சொல்லி தொந்தரவு கொடுப்பதாகவும் இதனால் மனமுடைந்த சித்ரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு டீசலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார் இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தி விசாரணைக்காக தேனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் பெண் தீ குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது

Translate »
error: Content is protected !!