கொரோனா தடுப்பில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் காவலர்களுக்கு மூலிகை தேநீர் வழங்கி காவலர்களை உற்சாகப்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இதில் தமிழகத்தில் நாள்தோரும் நோய் தொற்று எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவத்துறையினர், காவல்துறையினர் 24 மணி நேரமும் முன் களப்பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நாள் தோரும் வெயில் மழை என்று பாரமல் காவல் பணியில் உள்ள காவலர்கள் தற்பொழுது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு மக்களை பாதுகாத்து வரும் அவர்களுக்கு இயற்கை மூலிகை மூலம் சித்தா மருத்துத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட மூலிகை தேநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை இன்று பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் பெரியகுளம் உட்கோட்டத்தில் உள்ள காவல்நிலைத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவருக்கும் சமூக இடைவெளி விட்டு அமர வைத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாலர் சாய்சரண் தேஜஸ்வி மூலிகை தேநீரை அவரே வழங்கி காவலர்களை உற்சாகப்படுத்தினார்.
மேலும் காவலர்கள் நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதோடு உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முக கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை தூய்மை செய்தும் பாதுகாப்புடம் இருக்க அறிவுருத்தினார். மேலும் தமிழக அரசின் சித்த மருத்துவதுறையின் மூலம் தாயார் செய்யப்படும் மூலிகை தேநீர் பொடியை காவலர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பழங்குடி இன மலைவாழ் மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி பொருட்கள் வழங்கினார். இந்த நிகழ்சியில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.