மேற்குத் தொடர்ச்சி கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க தடை..!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் நீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையின்மையால் மிகவும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை பகுதியில் மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக பெய்த  கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடை விதித்துள்ள நிலையில்  அருவியில் சென்று பார்க்க மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக வனத்துறை அறிவித்துள்ளனர். மேலும் அருவிக்கு வரும் நீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி தெரிவித்துள்ளார்கோடை வெப்பத்தின் தாகத்தை தணிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Translate »
error: Content is protected !!