மோடியின் சதித் திட்டத்தை நிறைவேற்ற முயலும் ராஜேந்திரசிங்- பி.ஆர். பாண்டியன் ஆவேசம்

கன்னியாகுமரி துவங்கி டெல்லி நோக்கி விவசாயிகள் யாத்திரைப் பயணம் டெல்லி போராட்டத்தை சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டது பிஆர் பாண்டியன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 300 நாட்கள் கடந்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக கன்னியாகுமரியில் துவங்கி டெல்லி நோக்கி விவசாயிகள் யாத்திரை செல்வது எனவும் அக்டோபர் 2ஆம் தேதி அதற்கான துவக்க நிகழ்ச்சியில் போராட்டக்குழு முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் 20, 21,22 தேதிகளில் சென்னையில் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு முடிவெடுத்தது.

இக்கூட்டத்தின் முடிவை டெல்லியில் போராட்டம் நடத்திவரும் சம்யுக்த்த கிசான் மோர்ச்சா அமைப்பு நிராகரித்தது. அப்படிப் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால்
போராட்டக்களத்தில் தலைமைக் குழுவில் இடம்பெற்றிருந்த
வி எம் சிங் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கோடு மத்திய அரசின் துணையோடு வெளியேறினார். பின்னர் மோடியை சந்தித்து போராட்டத்தில் அந்நிய சக்திகள் ஊடுருவி விட்டது. குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள தயாராக உள்ளதாக போராட்டக் குழுவின் அனுமதி இல்லாமல் சுயநல நோக்கோடு கடிதம் எழுதிக்கொடுத்து போராட்டத்தை சீர்குழைக்க எடுத்த முயற்சியை உலகுக்கு போராட்டக்குழு எடுத்துறைத்து போராட்டம் தொடரும் என அறிவித்ததையடுத்து இன்று வரையில் வெற்றிகரமாக தொடர்கிறது.

விஎம்சிங் கடிதத்தில் ராஜேந்திரசிங் கையொப்பமிட்டு உள்ளதால் அவர் தலைமையில் தமிழகத்தில் கூடி எடுத்த முடிவை ஏற்க முடியாது என்றும்,ராஜேந்திர சிங் ஏற்கனவே
வி எம்சிங்கோடு சேர்ந்து மோடியிடம் எழுதி கொடுத்த கடிதத்தை திரும்பப் பெற்று போராட்டக் குழுவில் இணைந்து கொள்வதாக ஒப்புதல் கடிதம் கொடுத்தால் மட்டுமே குமரி யாத்திரை குறித்து பரிசீலிக்க முடியும் என்று அறிவித்தது.

இதனை ஏற்க மறுத்த ராஜேந்திரசிங் அவரது தமிழக பிரதிநிதியான வழக்கறிஞர் குருசாமி மூலம் இன்று திருச்சியில் மீண்டும் தமிழக விவசாயக் கூட்டமைப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கோரிக்கைகளை கைவிட்டு,விவசாய உற்பத்திப் பொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கேட்பதை மட்டுமே பிரச்சார நோக்கமாக வைத்து பயணத்தை திட்டமிடுவதற்கு தீர்மானம் முன்மொழியப்பட்டது.

அக்கூட்டத்தில் டெல்லி சம்யுக்த கிசான் மோர்ச்சா பிரதிநிதியாகப் பங்கேற்ற மகாராஷ்டிராவை சேர்ந்த பேசும்போது ஏற்கனவே குமரி-டெல்லி யாத்திரை குறித்து சம்பக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு கூடி விவாதித்து ராஜேந்திர சிங் ஒப்புதல் கடிதம் கேட்கப்பட்டது அதை அவர் கொடுக்க மறுத்ததால் அவர் தலைமையில் நடைபெறும் யாத்திரைக்கு அனுமதி கொடுக்க மறுத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நேரத்தில் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான கோரிக்கையை கைவிட்டு m.s.p. உத்தரவாதம் கேட்டு மட்டும் பிரச்சாரம் நடத்துவது பொருத்தமாக இருக்குமா? என்பதை தமிழக விவசாயிகள் யோசிக்க வேண்டும். எனவே இது குறித்து மறு பரிசீலனை செய்து யாத்திரை நடத்துவது பொருத்தமாக இருக்காது என உணர்ந்து பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசிய குருசாமி ராஜேந்திரசிங் இல்லாமல் யாத்திரை நடத்த இயலாது. ராஜேந்திர சிங் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில்லை. திட்டமிட்டு சிலர் அவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை டெல்லியில் பரப்பி வருகின்றனர். அதை பற்றி தமிழக விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் நாம் முடிவெடுத்தப்படி விவசாய யாத்திரையை தொடர்வதற்கு திட்டமிட வேண்டும் என்றார்.

இதற்குப் பின்னர் பேசிய பிஆர் பாண்டியன்.
ஏற்கனவே வேளாண் விரோத சட்டங்களை பாராளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றுவதற்கு எடப்பாடி தலைமையிலான தமிழக அரசுதான் அடிப்படையாக இருந்ததால் தமிழகத்திற்கு களங்கத்தை ஏற்பத்தியது. தற்போது புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்ற
மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் அதனை துடைத்து எறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்ட குழு அனுமதி இல்லாமல் நாம் யாத்திரை செல்வதும், யாத்திரையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கோரிக்கைகளை கைவிடுவது என்ற முடிவு திட்டமிட்டு மோடி செய்கிற சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ராஜேந்திரசிங் முயன்று வருவது வெட்டவெளிச்சமாகி உள்ளது. எனவே போராட்டத்திற்கு ஆதரவாக யாத்திரை செல்ல வேண்டுமானால் போராட்ட குழுவிடம் அனுமதி கேட்பதற்கு தமிழகத்திற்க்கென நாம் போராட்டக் குழுவை ஏற்படுத்தி யாத்திரையை மேற்கொள்ளும் வகையில் அவர்களிடம் ஒப்புதல் பெற்று போராட்டக்குழு முழு பங்களிப்போடு தமிழகத்தில் யாத்திரையை ஏற்பாடு செய்தால் போராட்டக்காரர்களுக்கு பயன் அளிக்கும்.மோடி அரசினுடைய துரோகம் வெளிப்படுத்த உதவும் என்றார்.

அதைவிட்டு புதிதாக ஒரு கோரிக்கையை வைத்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு என்கிற பெயரில் நாம் மேற்கொள்கிற யாத்திரை டெல்லி போராட்டத்தை இந்திய அளவில் சீர்குலைக்க முயற்சிக்கும்.மோடிக்கு துணைபோவதாக ஆகிவிடும்.எனவே மீண்டும் ஒரு அவப்பெயரை தமிழகம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே ஒரு குழுவை தமிழகத்தில் இடதுசாரிகள் மற்றும் ஒத்தக் கருத்துடைய அரசியல கட்சிகளின் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் உள்ளடக்கி ஏற்படுத்திட வேண்டும்.
அக்குழு டெல்லியில் உள்ள போராட்டக்குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி நேரடியாக சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையில் யாத்திரை செல்வதை முடிவெடுக்க வேண்டும். அது வரையிலும் தற்போது அக்டோபர் 2ல் துவங்கும் யாத்திரையை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அனைத்து நிர்வாகிகளும் யாத்திரையை மேற் கொள்வதற்கு கால அவகாசம் கொடுத்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியதால் கைவிட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து அய்யாக்கண்ணுவும் குருசாமியும் மறுபடியும் யாத்திரையை துவங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்ப்பட்ட வண்ணம் நீடித்தது. இதன்மூலம் ராஜேந்தர்சிங் உண்மை முகம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வழக்கறிஞர் ஈசன் கோவை சுப்பிரமணியன் தஞ்சை பழனியப்பன், மேலூர் அருண், கடலூர் இளங்கீரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் தலைவர்கள் பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!