வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து ஆஜராகாத பெரியகுளம் வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெரியகுளம் சார்பு நீதிமன்றம் உத்தரவு

வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து ஆஜராகாத பெரியகுளம் வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெரியகுளம் சார்பு நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் முனியாண்டி என்ற மதன் என்பவரின் வீட்டுடன் கூடிய காலிமனை தனக்கு சொந்தமானது என்று பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக

பெரியகுளம் வட்டாச்சியருக்கு  வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க கோரி பெரியகுளம் வட்டாச்சியருக்கு சம்மன் பிறப்பித்தும் இதுவரையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத நிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சுந்தர்ராஜன் பெரியகுளம் வட்டாட்சியர் ரத்னமாலா அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கீழ் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சார்பு நீதிமன்ற அமீனா ரமேஷ் மற்றும் மனுதாரரின் வழக்கறிஞர் காமராஜ் இருவரும் பெரியகுளம் கோட்டாட்சியர் ரத்னமாலா அவர்களை பிடிவாரன்ட் சம்மன் உடன் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வட்டாட்சியர் ரத்னமாலாவை அவர்களை பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு நீதிமன்றத்திற்கு ஊழியர்கள் அழைத்துச்  சென்றனர். பெரியகுளம் வட்டாட்சியருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது பெரியகுளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Translate »
error: Content is protected !!